Friday, November 26, 2010

சூரியனின் வலை வாசல்

சூரியனின் வலை வாசல்


Klueless - அறிவாளிகளுக்கான விளையாட்டு

Posted: 25 Nov 2010 08:36 PM PST



Klueless - இது ஒரு ஆன்லைன் புதிர் போட்டி. கடந்த 5 வருடமாக IIM, Indore-ஆல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிர் போட்டி எப்படி என்றால் இவர்கள் தரும் வலை முகவரியில் உள்ள க்ளூக்களை வைத்து அடுத்தடுத்த Level ஐ அடைய வேண்டும்.

க்ளூக்கள் வலைபக்கத்தின் தலைப்பிலோ, முகவரியிலோ, படத்திலோ, படத்தின் பெயரிலோ, Page Source -லோ இருக்கும்.... தேவையில்லாத க்ளுக்களை கொடுத்தும் குழப்பி இருப்பர், ஜாக்கிரதை.

விடைகள் ஒரு கிளிக் செய்யும்படியோ, வலை முகவரி மாற்றும்படியோ அல்லது விடை பட்டையில் எழுதும்படியோ இருக்கும்....

என்ன முட்டி மோதியும் சென்ற ஆண்டு என்னால் 25 level ஐ தான் தொட முடிந்தது. இந்த ஆண்டு 20 வரையே வந்துள்ளேன்....

முயற்சி செய்து பாருங்களேன்... நானும் உதவுகிறேன்... கூட்டணி வைத்தாவது இந்த முறை முடிக்க முயற்சிப்போம், வாருங்கள்...

விளையாட்டை தொடங்க இங்கு செல்லவும்...

விதிமுறைகள் இங்கு உள்ளது....

மூளையை தூசு தட்டுவோமா? ஸ்டார்ட் மியூசிக்....

டிஸ்கி 1 : விடைகளை வெளியிடாமலும், சுலபமாக க்ளுதருவதை தவிர்க்கவும் கமெண்டுக்கள் மட்டறுக்கப்படுகிறது

டிஸ்கி 2: என் அடுத்த 75வது இடுகையை வலைசரத்தில் அடுத்த வாரம்  முதல் எழுதுகிறேன்.... தாம்பூலம் வெச்சாச்சி, வந்துடுங்க மக்கா....



No comments:

Post a Comment