சூரியனின் வலை வாசல் |
| Posted: 06 Dec 2010 08:57 PM PST ஒரு வழியா ஒரு வாரம் வலைசரத்துல ஓட்டியாச்சு... சரி, அந்த அனுபவம் எப்படி? அதன் சாதக, பாதகங்கள் என்ன? உண்மையிலேயே, வலைச்சர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்த வேலைதான். பல ஜாம்பவான்கள் எழுதி இருக்கும் இடத்தில் நீங்களும் எழுதி உங்கள் முத்திரையை பதிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. நிறைய படிக்க வேண்டும், புதிய பதிவர்களை தேட வேண்டும் (அடேய்! அதுதாண்டா வலைச்சர கான்செப்ட்டே!) எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் விளையாட்டாய் தெரிந்தாலும், நேரம் நெருங்க நெருங்க ஒரு சீரியஸ்னேஸ் ஆட்டோமெட்டிக்காக வந்துவிடுகிறது. உங்களின் பதிவுகளை பற்றி எழுத, உங்கள் பழைய பதிவுகளை படிக்கும் போதுதான் நம்முடைய ( + ) மற்றும் ( - ) தெரியவருது. என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும், சில பதிவுகளை பார்த்து தவறுகளை கண்டு கொண்டது இந்த வலைசரத்தால்தான். இப்போ தெரியுது மத்தவங்க எவ்வளோ கஷ்ட்டப்பட்டு இருப்பாங்கனு, என் பதிவை படிச்சி. சாதகங்கள்: 1. மற்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ இல்லையோ கண்டிப்பாய் நீங்கள் வெளிச்சத்திற்கு வருகிறீர்கள் 2. உங்கள் எழுத்து நடை, பொது அறிவு, கற்பனைத்திறன் எல்லாம் ஊன்றி கவனிக்கபடுவதால், உங்களுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது. 3. உங்கள் followers எண்ணிக்கை கணிசமாக உயரும். 4. நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய பதிவர்கள் உளமாற சொல்லும் நன்றியை நீங்கள் உணர முடியும். 5. உங்களை பாராட்டி அவர்கள் ஒரு நாலு வார்த்தை எழுதுவார்கள் அவர்கள் பதிவில். 6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க.... பாதங்கள்: 1. நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும் 2. தினமும் பதிவு எழுதனும், அதுக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்யனும். 3. நண்பர்களின் பிளாக்குகளுக்கு போக கொஞ்சம் சிரமமா இருக்கும். 4. ஒரு வாரம் முடிஞ்சிவந்தா... புது உலகத்துல இருக்கற மாதிரி இருக்கும். டிப்ஸ்: (இப்படித்தான் நான் செஞ்சேன்) 1. எழுதப்போறதுக்கு 2 வாரத்துக்கு முன்னாடி இருந்தே பதிவர்கள் / பதிவுகள் லிஸ்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க 2. உங்களுக்கு கமெண்ட் போடுறவுங்க, நீங்க கமெண்ட் போடுற பதிவர்களுக்கு கமெண்ட் போடுறவுங்களை எல்லாம் பார்த்துட்டே இருங்க. 3. புதுசா யாராவது தெரிஞ்சா அவங்க பிளாக் போய் பாருங்க. 4. அவங்க யாரை எல்லாம் follow பண்ணுறாங்கனும் போய் பார்த்துட்டு வாங்க. 5. வித்தியாசமா ஒரு கான்செப்ட்ல பதிவர்களை அறிமுப்படுத்துங்க. (பூக்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், வண்ணங்களின் பெயர்கள் - இப்படி) 6. ஓவரா தூய தமிழ்ல எழுதாதீங்க... பேச்சு தமிழ்தான் ஒரு கோர்வையா நல்லா இருக்கும் 7. எதுக்கும் திட்டமிட்டதைவிட அதிக பதிவர்களின் பட்டியலை வெச்சிக்கோங்க. உங்களுக்கு முன் வாரம் எழுதும் ஆசிரியர்கள் உங்கள் பட்டியலில் இருப்பவரை அறிமுகப்படுத்தும் சாத்தியம் அதிகம் (நம்ம ராம்ஸ் இப்போ என்னால அவஸ்தைபடுற மாதிரி... நல்ல வேளை நான் எழுதினதுக்கு முன் வாரம் வலைச்சரத்துக்கு லீவ் விட்டுடாங்க) 8. தயவு செய்து பாரதி, பாரதிதாசன், ள, ல, ற, ர - இதை எல்லாம் கரெக்ட்டா போடுங்க... இல்லைனா எனக்கு கிடைச்ச பல்பு உங்களுக்கும் கண்டிப்பா கிடைச்சிடும். அவ்வ்வ்வ்வ்.... சரி, வலைசரத்துல நான் எழுதிய பதிவுகளின் பட்டியல் இதோ.... 1. சீனா சாரின் வரவேற்ப்பு - வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக ! 2. சுயபுராணம் - ஆட்டம் ஆரம்பம்! 3. முதல் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஒன்று 4. இரண்டாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் இரண்டு... 5. மூன்றாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் மூன்று... 6. நான்காம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் நான்கு.... 7. ஐந்தாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஐந்து..... 8. ஆறாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஆறு...... 9. வாழ்த்தும் வழியனுப்புதலும் - செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல் தயவுசெய்து இதை போய் மறுபடியும் படிச்சி நொந்து போகாதீங்க.... ஆங்... சொல்ல மறந்துட்டனே.... வலைசரத்தில் 7 நாளும் கமெண்ட் சரவெடி கொண்டாட்டம் நடத்திய நம்ம கும்மி குரூப்பு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி! |
| You are subscribed to email updates from "சூரியனின் வலை வாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

No comments:
Post a Comment