Friday, December 10, 2010

சூரியனின் வலை வாசல்

சூரியனின் வலை வாசல்


பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

Posted: 09 Dec 2010 08:43 PM PST

பெண் மனசை வெளிப்படுத்தும் அல்லது பெண் குரலில் ஒலித்த எனக்கு பிடித்த 10 பாடல்களை பகிரும்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம மேட்டுபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ சகோதரிகள் கூப்பிட்டு இருந்தாங்க. 

கொஞ்சம் (?!) லேட்டாகிடுச்சு. பெண் குரல்கள், பெண் மனசை வெளிப்படுத்தும் பாடல் அதிக அளவில் இருகிறது அதில் 10 தேர்ந்து எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால்,  என் நினைவில் உடனே வந்த 10 பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

சின்ன குயில் சித்ராவின் குரலில், இளையராஜா இசை ராஜாங்கம் நடத்திய புன்னகை மன்னனின்  "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" என் ஆல் டைம் பேவரைட். வைரமுத்துவின் வைர வரிகள் இவை...

"நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்.... "

2. சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே....
ஜென்சி குரலில் இளையராஜாவின் மயக்கும் இசையில் கண்ணதாசன் வார்த்தை ஜாலம் காட்டி இருப்பார். ஜானி படத்தில் வரும் "என் வானிலே.. ஒரே வெண்ணிலா" - மனதை மயக்கும் பாடல்

"நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா..."

3. பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...
அனுராதா ஸ்ரீராம் குரல் + ஹாரீஸ் ஜெயராஜ் இசை = பர்பெக்ட் காம்பினேஷன். லேசா லேசா படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் கவிஞர் வாலியின் எழுத்தில் இந்த பாடல், கண்டிப்பாய் THE BEST...

"நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே..."

4. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...
ஒரு பெண்ணின் காதல் உணர்வையும் எதிர்பார்ப்பையும் அழகாய் சொல்லி இருப்பார் கவிஞர் தாமரை. பாம்பே ஜெயஸ்ரீ குரலும் ஹாரீஸ் இசையும் மின்னலே படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்

"அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம..."

5. பிறந்த உடலும் நீ! பிரிந்த உயிரும் நீ!
"ஒரு தெய்வம் தந்த பூவே" இதைவிட அருமையாய் ஒரு குழந்தையை எந்த கவிஞராலும் வர்ணிக்க முடியாது. வைரமுத்து அதில் சளைதவர் இல்லை என்பதை நிருபித்து இருப்பார். சின்மயியின் செல்லக்குரலில் ஏஆர் ரஹ்மான் இசையில் "கன்னத்தில் முத்தமிட்டால்" கண்டிப்பாய் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்?

"எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!..."

6. ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே...
லதா ரஜினிகாந்த், இளையராஜா இசையில் பாடியது. காட்சி அமைப்பும் பாடல் வரிகளும் மனதை உருக்கும். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் பெயரை சொன்னது நினைவுக்கு வருவது இந்த பாடல்தான்..

"கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்

7. தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர...
இளையராஜாவின் மெல்லிய இசையில் ஜானகி அம்மாவின் குரலில்  - கண்மூடி கேட்டால் நம்மை நம் தாயின் மடிக்கே கொண்டு செல்லும் பாடல். வாலியின் வரிகளில் தளபதி படத்தின் "சின்னத்தாயவள் தந்த" பாடல் எனக்கு பல முறை மனஆறுதல் தந்து இருக்கிறது.

"தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..."

8. சிங்கார வேலனே தேவா...
இந்த பாடலை எப்படித்தான் ஜானகி அம்மாவால் பாட முடிந்ததோ! வரிகளுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அதில் வரும் ஸ்வரங்கள், அதற்கு இணையான நாதஸ்வர இசை பிரம்மிக்க வைக்கும். சுப்பையா நாயுடுவின் இசையில் கொஞ்சும் சலங்கை படத்தின் "சிங்கார வேலனே தேவா..." மலைக்க வைக்கும் பாடல்...

"செந்தூரில் நின்றாடும் தேவா….
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா"

9. விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே...
கண்மூடி கேட்டால் கடவுளை கொஞ்சுவது போல இருக்கும் இந்த பாடல். அனுராதா ஸ்ரீராம் குரலில் வைரமுத்து எழுத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அருமையாக அமைந்த மின்சாரகனவு படப்பாடல்...

"இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே 
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே 
புவிராஜன் தோன்றினானே"

10. அன்பே உந்தன் அழகு முகத்தை... யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது..
சிம்ரனுக்காகவே இந்த பாட்டை பல முறை பார்த்தேன். இந்த பாடலில் வைரமுத்து எடுத்தாண்டு இருக்கும் வார்த்தைகள் நன்றாய் இருக்கும். ஹரினி குரலும் தேவா இசையும் சேர்ந்து வந்த நேருக்கு நேர் படத்தின் பாடல் என் பதின்மத்தை நினைவுபடுத்தும்.
 "புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்"

இந்த பதிவை தொடர நான் அழைப்பது....

மேலும், பெண்பதிவர்கள் பார்வையிலும் என்ன பாடல்கள் வருகிறது என தொடர வருகிறார்கள்...


No comments:

Post a Comment