சூரியனின் வலை வாசல் |
| Posted: 19 Dec 2010 09:06 PM PST என்னுடைய பயண அனுபவங்கள் வரிசையில் இன்று ஒரு வித்தியாசமான பயணம் போகலாம். பாராசூட்டுக்கு அடுத்து இப்பொழுது கடல் வழி பயணம். டால்பின்களின் வரவேற்புடன்...
மொரீசியஸ் தீவின் வடக்கு முனையில் உள்ள Grandbay கடற்கரையிலிருந்து கடல் வழியாக சுமார் 1.30 மணி நேர பயண தொலைவில அமைந்துள்ளது Gabriel Island. ரொம்ப நாளா பிளான் செஞ்சி ஒரு ஆளுக்கு மொரீசியன் ரூபாய் 1200 கொடுத்து அட்வான்ஸ் புக் செய்து கிளம்பினோம். படகில் மொத்தம் கிட்டதட்ட 25 பேர். எங்க கோஷ்டிதான் பெரிய கோஷ்டி... மற்றவர்கள் எல்லாம் வெள்ளைகாரர்கள்...
படகு ஒரு ஸ்பீட் போட் மாதிரி இருக்கும். படகின் முன்னால் இரு வலை போல கட்டி அதிலும் அமர்ந்து கொள்ளலாம். வலைக்கு கீழே கடல் தண்ணீர் தெளிக்கும். வலை கட்டி இருக்கு கம்பிகளில் காலை தொங்க விட்டு கடல் தண்ணீரை தொட்டபடியும் பயணம் செய்யலாம். எங்க கோஷ்டி மொத்த வலையையும் ஆக்கிரமிச்சாச்சு.... வெளிநாட்டினர் டீசண்டாக படகில் நிழலில் அமர்ந்து கொண்டனர்.
ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and Fruit juice FREE.... படகில் ஒரு ஓட்டுனரும் 3 உதவியாளர்களும் வழக்கமான ரூல்ஸ் மற்றும் சில safety tips களை விளக்கினர். பெரும்பாலானோருக்கு படகு போடும் ஆட்டத்தில் வாந்தி வருமாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க சொன்னார்கள். கிளம்பிய கொஞ்ச நேரத்தில் படகு போட்ட ஆட்டத்தை விட தண்ணீரை காலால் தொட்டு நாங்கள் போட்ட ஆட்டம் தான் அதிகம். தெளிவான வானமும், நீல கடலும், துள்ளும் தண்ணீரும், ஈரக்காற்றும் கண்டிப்பாய் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்.
நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீர் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்..... அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு "ஜிவ்" என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்.... தொடரும்....
|
| You are subscribed to email updates from "சூரியனின் வலை வாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

No comments:
Post a Comment