சூரியனின் வலை வாசல் |
| Posted: 21 Dec 2010 09:09 PM PST சென்ற பதிவின் தொடர்ச்சி..... நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீரில் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்..... அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு "ஜிவ்" என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்.... டால்பின் வீடியோ:உடனே, சுமார் 20 டால்பின்கள் ஒன்றன்பின் ஒன்றாய் எங்கள் படகை சுற்றி திரிந்தன. எல்லா டால்பின்களும் "பாட்டில் மூக்கு" டால்பின் வகையை சார்ந்தவை. நாங்கள் சென்றது டால்பின்களின் இனப்பெருக்க சீசனாம், அப்பொழுது மட்டுமே இவை இந்த பகுதிக்கு வருமாம்.அவை துள்ளி விளையாடிய அழகே அழகு. அவை சிறிது நேரம் விளையாடிவிட்டு சென்றதும், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. கடல் நடுவில் மிகப்பெரிய மலை ஒன்று இருந்தது. எரிமலை வெடிப்பால் உருவானது என சொன்னார்கள். அதை கடந்தவுடன் கப்பலின் ஆட்டத்தாலும் என்னுடைய ஓவர் ஆட்டத்தலும் எனக்கு தலை சுற்ற... நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)
கேப்பிரியல் தீவை அடைந்தவுடன் எங்களை சிறு ரப்பர் படகு மூலம் தீவில் எங்களை விட்டனர்... மதியம் சாப்பிட வந்து பிக் அப் செய்வதாக சொன்னார்கள். கடலில் குளித்து தீவை சுற்றி பார்த்தோம். திருமணம் செய்வதற்காக பிரத்தியேக திறந்த வெளி சர்ச் ஒன்று இருக்கிறது. எப்படிலாம் யோசிச்சி கல்யாணம் பண்ணுறாங்க?
அங்கு, சில கடல்சார் இடங்களில் மட்டுமே பார்க்க கூடிய கயிறு போல நீண்ட வால் கொண்ட Phaethon lepturus (paille en queue) பறவைகளை காண முடிந்தது. இவை Air Mauritius ன் லோகோ என்பது கூடுதல் செய்தி. மீண்டும் மதியம் படகிற்கு சென்று லஞ்ச் முடித்து கடலில் ஆட்டம் போட்டோம்.
3 மணிக்கு கிளம்பி, வந்தது போலவே முழு வலையையும் நாங்கள் ஆக்கிரமித்து வந்து சேர்ந்தோம். இப்பொழுதும் கடல் நீரில நன்றாக நனைந்து... சுடும் வெயிலில் காய்ந்தும் வந்து சேர்ந்தோம். மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).
திரும்பி வந்த பிறகு சொல்லுறாங்க... ஏதோ லோஷன்லாம் போட்டுட்டு தான் கடல் தண்ணில ஆடனுமாம்... அதனால தான் வெள்ளைகாரங்க நிழல்ல உட்கார்ந்து இருந்தாங்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க. |
| You are subscribed to email updates from "சூரியனின் வலை வாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

No comments:
Post a Comment