சூரியனின் வலை வாசல் |
| 2010 ன் எனக்கு பிடித்த 10 திரைப்படங்கள்... Posted: 13 Dec 2010 09:14 PM PST நம்ம சிரிப்புபோலிசு 2010 ல வெளிவந்து தனக்கு பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தி டாப் 10 போட்டு இருந்தாரு... என்னையும் தொடர்பதிவு எழுத கூப்டுட்டாரு. இதோ நான் பார்த்த, எனக்கு பிடித்த 2010 ல் வெளிவந்த படங்கள்.... 1.கோவா 2. தமிழ்படம் 3. விண்ணைதாண்டி வருவாயா 4.ரேணுகுண்டா 5. சிங்கம்6. இராவணன் 7. களவாணி 8. மதராசபட்டினம் 9. பாஸ் என்கிற பாஸ்கரன் 10. எந்திரன் எல்லா படங்களும் அவை ரிலீஸ் ஆன வரிசையில் கொடுத்துள்ளேன்.... லிஸ்ட்டை மயிரிழையில் தவறவிட்ட படங்கள்.... 11. பையா 12 வம்சம் 13. தில்லாலங்கடி யாரது, மைனா, நந்தலாலா, அங்காடிதெரு, சுறா.... இதெல்லாம் மிஸ்சிங்னு சண்டைக்கு வர்றது.... நல்லா பாருங்க "நான் பார்த்த" படங்களின் லிஸ்ட் இது.....எனக்கு மட்டும் மத்த படங்களை பார்க்கனும்னு ஆசை இல்லையா என்ன?.... மொரீசியஸ்ல எந்த தமிழ்படமும் ரிலிஸ் ஆகுறது இல்லைங்க... ரிலிஸ் ஆனா ஒரே படம் எந்திரன்தான்... அதோட நிலைமைய ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லிட்டேன்... தலைவர் படத்துக்குகே இந்த நிலைமைன்னா மத்த படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும்? இதுல மொரீசியஸ் நாட்டின் தேசிய மொழிகள்ல தமிழும் ஒன்று... இந்த நாட்டு ரூபாய் நோட்டுல தமிழ்லயும் எழுதி இருக்காங்க..... என்ன கொடுமைங்க இது.... 2010ல ரீலிஸ் ஆன படங்கள்ல மொத்தம் 13 படம்தான் பார்த்து இருக்கேன்... அந்த லிஸ்ட்தான் இது... படத்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்தையும் டவுண்லோட் பண்ணி பார்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... அடுத்து, இந்த தொடர்பதிவுக்கு சிரிப்பு போலிஸ் பிளாகில் கடும் எதிர்ப்பு தெரிவித்த 3 பேரையும் இந்த தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன்.... |
| You are subscribed to email updates from "சூரியனின் வலை வாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



No comments:
Post a Comment