சூரியனின் வலை வாசல் |
| Posted: 06 Jan 2011 09:03 PM PST நண்பர் பாலாஜி சரவணா, 2010ல் என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை எழுதுமாறு ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். உண்மையிலேயே 2010 என் வாழ்வில் மிகச்சிறந்த ஆண்டாகவே இருந்துச்சி. ஒரு செண்டிமெண்ட் காரணமாக நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டுடேன், அதனால எல்லா விஷயங்களையும் சொல்ல முடியுமானு தெரியலை. முடிஞ்ச அளவு நினைவுக்கு வரும் விஷயங்களை சொல்லுறேன். ஆண்டு தொடக்கமே என் வாழ்க்கையின் நீண்ட நாள் கனவான வெளிநாட்டு பயணம் + வேலையில் தான் ஆரம்பிச்சுச்சு. ஆமாங்க, மொரீசியஸ் வேலைக்கு சேர்ந்தது ஜனவரி 5 ல தான். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைனு எல்லோரையும் பிரிஞ்சி மொரீசியஸ் வந்து சேர்ந்தேன். சொந்த மண் மற்றும் சொந்தங்களை பிரியரனேன்னு ஒரு வருத்தம் இருந்தாலும் ஒரு புதிய அனுபவம் கிடைச்சி இருக்கேனு ஒரு மகிழ்ச்சியும் இருக்கத்தான் செஞ்சிச்சி. எனக்கு கல்யாணம் ஆன பின்னாடி என் மனைவிய பிரிஞ்சிருந்த 18 மாச பிரிவு முடிவுக்கு வந்துச்சி. வேலை விஷயமா ஹைதராபாத், விசாகபட்டினம்னு ஆந்திரா முழுசா சுத்தி வாராவாரம் சென்னைக்கு வந்துட்டு போயிட்டு (கிட்டதட்ட வாரத்துக்கு 4 நாள் தலா 700 கிமீ பயணம்) இருந்தது முடிவுக்கு வர, மார்ச் மாசம் மனைவியும் என் குழந்தையும் என் கூடவே இருக்க மொரீசியஸ் வந்ததாங்க. இதுதான் என் ஒட்டு மொத்த வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான நிகழ்வு. அலைஞ்சி திரிஞ்ச வேலை நின்று, ஒரே இடத்தில் வேலை செய்யும் சூழலும் உருவாச்சி. என் இத்தனை வருட தொழில் அனுபவத்துக்கு அங்கிகாரம் கிடைச்சதும், என் திறமைகளை காண்பிக்க ஒரு நல்ல இடமும் அமைஞ்சதும் இந்த வருடம்தான். சும்மா இருந்தவனை சொறிஞ்விட்ட மாதிரி... சும்மா நெட்டுல மேஞ்சிட்டு இருந்தப்போ பிளாக் பத்தி தெரிஞ்சி அதை ஆரம்பிச்சி உங்களை எல்லாம் டார்சர் பண்ண ஆரம்பிச்சதும் 2010ல தான். ஆனா, இந்த பிளாக் தயவால கிடைச்ச நண்பர்கள் பட்டாளம் உலகம் முழுக்க இருக்குது. இன்னைக்கு நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க. அவ்வளவுதாங்க நினைவுக்கு வருது.... ஆங்...கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிகறேனே பிளிஸ். இதையும் கேட்டுருங்க ப்ளீஸ். என்னது மாட்டீங்களா, நான் பல்பு வாங்கறது பத்திங்க. ஓ அப்போ கேகறீங்களா? என்னா வில்லத்தனம்! என் பொண்ணு கையால நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பல்பு வாங்கிட்டு இருக்கறேன். இனியும் வாங்குவேன், சும்மாவா எத்தனை பேருக்கு பல்பு கொடுத்து இருக்கேன். பொண்ணு கையால பல்பு வாங்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தாங்க செய்யுது..... இது தொடர்பதிவாமே, யாரையாவது மாட்டிவிடலைனா பதிவுலக தொழில் தர்மம் ஆகாது அதனால யார்கிட்டலாம் 2010 ல வாங்கி கட்டிகிட்டேன்னு சொல்லவராங்க, அருண்பிரசாத் (ஜூனியர்) தலைவர் எஸ் கே பாசமலர் சுபத்ரா மச்சான் டெரர் பாண்டியன் |
| You are subscribed to email updates from "சூரியனின் வலை வாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
No comments:
Post a Comment