சூரியனின் வலை வாசல் |
| Posted: 05 Jul 2011 11:03 PM PDT பிப்ரவரி மாசம் நான் இந்தியால சுற்றுபயணம் செஞ்சிட்டு இருந்தப்போ, (வெளிநாட்டுத் தலைவருங்க இந்தியா வந்து போறதுக்கு பேரு சுற்றுபயணம்னு தானேப்பா சொல்லுவாங்க) சென்னைல இருந்து எங்க ஊருக்கு நம்ம அரசு பேருந்துல போனேன். நம்ம ஊரு வண்டி என்னை ஏமாத்தலை, வழக்கம் போல எல்லாமே ஓட்ட உடைச்சலாதான் இருந்துச்சு. இதுல வீடியோ போடறேன் பேர் விழினு பழைய சிவாஜி பாட்டுகளை போட்டானுங்க. என்ன பிரச்சனையோ தெரியல ஆடியோ மட்டும் விட்டு விட்டு வந்துச்சு, ஆனா படம் தெளிவா போச்சு ஆங்கில சப் டைட்டில்லோட. அநியாயத்துக்கும் தமிழை அப்படியே டிரான்ஸ்லேட் (அவ்வ்வ்வ்.... நானும் ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்கறேன்னா?) பண்ணி வெச்சி இருக்காங்க..... சில பாடல்களின் முதல் வரி இதோ..... என்ன பாட்டுனு கண்டுபிடிங்க பார்க்கலாம்... 1) What i told? why you feel giddy? 2) Good man, I am a goodman for Myself 3) I am neither a poet nor I am a great fan 4) Is it somebody that i've seen young in a frock 5) What ever I want to say, You must say 6) Let the One let us, go 7) She has just flown away, she has forgetten me completely 8) can all the stones turn into diamonds டிஸ்கி: இதை விட கொடுமையா நான் ஒரு பாட்டை டிரான்ஸ்லேட் பண்ணி இருக்கேன் இங்க போய் பாருங்க. |
| You are subscribed to email updates from "சூரியனின் வலைவாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


No comments:
Post a Comment