சூரியனின் வலை வாசல் |
| பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க.... Posted: 01 Aug 2011 11:56 PM PDT டிஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து கற்பனைகளும் எழுதியவரையே சாரும்.... சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. எங்கேயோ எப்பவோ கேட்டதை வச்சிகொஞ்சம் உல்ட்டா பண்ணி எழுதின பதிவு இது. நம்ம பன்னிகுட்டி ராம்சாமி அவரோட பன்னீஸ் டிவிக்காக ஒரு வீ ஜே வை தேடிட்டு இருக்காரு. அவருக்காக நம்ம செல்வா, அவரை மாதிரியே ஒல்லியா இருக்கற ஒரு ஆளை இன்ட்ரவியூக்கு கூட்டி வராரு. இருங்க என்ன நடக்குதுனு பார்ப்போம்.... செல்வா: அண்ணே, அண்ணே.... பன்னிக்குட்டி ராம்சாமி: வாடா கோபுரதலையா, என்ன இந்த பக்கம் செல்வா: அண்ணே நீங்க ஒரு பெரிய டிவி கம்பனி ஓனர் இல்லையா? ப.ரா: ஆமா, அதுகென்ன இப்போ செல்வா: உங்க டீவி ஒரு வீ ஜே வேணும்னு சொன்னீங்க இல்லையா ப.ரா: ஆமா, ஏன் நீயே வரேன்னு சொல்லுறீய்யா. செல்வா: அட இல்லைண்ணே, (உங்க கம்பனில எவன் வேலை செய்வான்) ஒரு தம்பிய கூட்டி வந்து இருக்கேன்.ஆனா தம்பிக்கு ஒரு சின்ன பிரச்சனை ப.ரா: என்ன? பேச வராதா? செல்வா: அது நல்லாவே வரும் ஆனா ஒரு எழுத்துதான் வராது "வ"னாக்கு பதில் "த"னா தான் வரும் ப.ரா: தமிழ்ல இருக்கற 247 எழுத்துல ஒரு எழுத்துவறலைனா என்ன? வர சொல்லு நான் சமாளிச்சிக்கறேன் செல்வா: தம்பி வாப்பா.... தம்பி: சார் தணக்கம் சார் ப.ரா: யார்றா இந்த பன்னிய உள்ள விட்டது செல்வா: அண்ணே, இவர் தான்னே நான் சொன்ன அந்த தம்பி தம்பி: சார் தணக்கம் சார் செல்வா: வணக்கம்னு சொல்றான்னே ப.ரா: ஓ, வணக்கம்பா, உன் பேரு என்ன? தம்பி: தடிதேலு சார் ப.ரா: என்னது தடிதேலா, உனக்கு ஊரல வேற பேரே கிடைக்கலையா? இப்படி ஒரு பேரை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லையே ராசா செல்வா: வடிவேலுன்னே ப.ரா: ஓ, வடிவேலா. சரி, தம்பி குரலை டெஸ்ட் பண்ணுவோம். தம்பி ஏதாவது பேசு பார்ப்போம் தம்பி: சார், நான் சிதாஜி மாதிரி நல்லா தசனம் பேசுதேன் சார் ப.ரா: என்னது சிதாஜி மாதிரி தசனமா? செல்வா: சிவாஜி மாதிரி வசனம் பேசுவேன்னு சொல்றான்னே... டேய், பேசி காட்டுறா தம்பி: தரி, தட்டி, திரை , கிஸ்தி. யாரை கேட்கிறாய் தட்டி. தானம் பொழிகிறது ,பூமி திளைகிறது, உனக்கேன் கொடுக்க தேண்டும் கிஸ்தி. ப.ரா: அய்யோ, அய்யோ, அய்யோ... தரி, தட்டியா....நிறுத்துடா நிறுத்துடா செல்வா: டேய் வேற பேசுடா தம்பி: அண்ணே ஒரு பாட்டு பாடதா ப.ரா: பாது...சே...பாடு தம்பி: தாடியம்மா, தாடி. தண்டாட்டம் தாடி.... ப.ரா: டேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....செல்வா...நிறுத்த சொல்லுடா.... முடியல.... செல்வா: அவன் வாடியம்மா வாடி, வண்டாட்டம் வாடின்ற பாட்டை பாடுறான்னே.... டேய் வேற பாடு தம்பி: சரிண்ணே.... தாங்கய்யா, தாதியாரைய்யா, தரதேற்க்க தந்தோம் அய்யா... ப.ரா: அய்யோ சாமி யாராவது காப்பதுங்களேன்... டேய் செல்வா முதல்ல இவனை கூட்டிட்டு வெளில போடா செல்வா: சரிண்ணே, டேய் தம்பி அண்ணனுக்கு மூட் சரியில்லை அப்புறம் வரலாம். அண்ணன்கிட்ட சொல்லிட்டு கிளம்பு தம்பி: சரிண்ணே அப்போ போயிட்டு தரேன்னே..... ப.ரா: போயிட்டு தர்றிய்யா..... அய்யோ.... யாராவது என்னை காப்பாத்துங்களேன்....... செல்வா: அண்ணே நாளைக்கு வேற ஒருத்தனை கூட்டிட்டு வரேன்னே....அவன் இவனை மாதிரி இல்லைனே நல்லா பேசுவான்...என்ன "ச"னா வராது அதுக்கு பதில் "ரா"னா தான் வரும். ப.ரா: இன்னொருத்தனா................. Breaking News: பன்னீஸ் டீவியின் அவசர செய்தி. எங்கள் தொலைக்காட்சியின் ஓனர், முதலாளி பன்னிகுட்டி ராம்சாமியை காணவில்லை. சென்னை கீழ்பாக்கம் பக்கமோ, ஏர்வாடி பக்கமோ தென்பட்டால் தகவல் தெரிவிக்கவும்..... டிவி பன்னி.... எங்க போனே நீ.... |
| You are subscribed to email updates from "சூரியனின் வலைவாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


No comments:
Post a Comment