சூரியனின் வலை வாசல் |
| Posted: 08 Aug 2011 09:55 PM PDT சும்மா இருந்தவனை சொறிஞ்சிவிடுறதுனு சொல்லுவாங்கல்ல, அதுக்கு உதாரணம்தான் இந்த தொடர்பதிவு கான்செப்ட்.... ரமேஷ், செல்வா, பாபு, டெரர், நரினு ஒரு பெரிய பட்டாளத்தோட பிளாக் எல்லாம் தூசு புடிச்சி இருந்ததை பார்த்து பொறுக்காத வெட்டிபயல்.... (சாரி... வெறும்பயல்னு சொல்லனுமா....) வெறும்பய ஜெயந்த் மூணை வெச்சி ஒரு தொடர்பதிவு போட்டு பாராபட்சம் இல்லாம எல்லாரையும் கூப்பிட்டு விட்டுடாரு.... எங்க எழுதாம விட்டா டெரர் கும்மிய விட்டு ஒதுக்கு வெச்சி நம்மள உருப்படி வெச்சிடுவாங்களோனு சொல்லி நானும் எழுதறேன்... தொடர் பதிவ..... 1. விரும்பும் 3 விஷயங்கள் அ. ரயில் பயணம் ஆ. ஜன்னலோர தனி இருக்கை இ. துணைக்கு இளையராஜா 2. விரும்பாத 3 விஷயங்கள் அ. அரசியல் ஆ. ஊருக்கு உபதேசம் இ. தற்பெருமை 3. பயப்படும் 3 விஷயங்கள் அ. உயரம் ஆ. வேகம் இ. இருட்டு 4. புரியாத 3 விஷயங்கள் அ. தற்கால சினிமா பாடல் ஆ. நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் இ. கெமிஸ்ட்ரி (அட வேதியியல் பாடம்பா... கலாக்காகிட்டலாம் ட்ரைனிங் போக முடியாது) 5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள் அ. ஃபைல்கள் ஆ. Planனே எழுதாத Monthly Planner இ. என் குழந்தையின் கிறுக்கல்கள் 6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள் அ. கும்மி குரூப் ஆ.ஷமியின் குறும்புகள் இ. சொன்னா வெவகாரமா போய்டும்.... உங்களுக்கு தெரியாமயே இருக்கட்டும் 7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் அ. சேத்தன் பகத்தின் " the 3 mistakes of my life" படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3) ஆ. டெரர் கும்மிக்காக "Hunt for the Hint" கேம் தயாரிச்சிட்டு இருக்கேன் இ. கும்மி குரூப்புடன் அரட்டை 10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள் அ. சமையல் ஆ. இலக்கியம் இ. போட்டோஷாப் 11. பிடித்த 3 உணவு விஷயங்கள் அ. பன்னீர் - எந்த பார்ம்மா இருந்தாலும் ஆ. சரவண பவன் காபி இ. ஹைதராபாத் பிரியாணி 12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள் அ. தற்பெருமை ஆ. குறை சொல்லுறது இ. அட்வைஸ் 13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் அ. இதயம் ஒரு கோவில்... ஆ. சலங்கையிட்டால் ஒரு மாது இ. ஹரிவராசனம் (காலைல தினமும் அலாரம் அடிச்சி எழுப்பிவிட்டுரும்) 14. பிடித்த 3 படங்கள் அ. தில்லுமுல்லு, வசூல்ராஜா, அன்பே சிவம் (காமெடி) ஆ. பாட்ஷா, சிவாஜி, காக்க காக்க (அதிரடி) இ. ரோஜாக்கூட்டம், சேது, இதயத்தை திருடாதே (காதல்) 15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம் அ. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆ, இ. அதானால இந்த 2 கேள்வி பாஸ் 16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர் அ. கமெண்ட் மட்டுமே போட்டு பிலாக் எழுதாத அனு ஆ. பிலாக் எழுதியும் தொடர்பதிவு எழுதாத வெங்கட் இ. கமெண்ட் போட்டும் பதிவு எழுதிட்டும் இருந்த, இப்போ எழுதாத பட்டிக்காட்டன் ஜெய் எவண்டா தொடர்பதிவுனு ஒரு கான்செப்ட்டை கண்டுபிடிச்சது.... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்.... தக்காளி...சட்னிதான் |
| You are subscribed to email updates from "சூரியனின் வலைவாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


No comments:
Post a Comment