சூரியனின் வலை வாசல் |
| HUNT FOR HINT - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய் Posted: 17 Aug 2011 01:35 AM PDT நண்பர்களே, சிறுகதை போட்டி, கவிதைப்போட்டிகளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த நம் பதிவுலகம், முதல் முறையாக ஒரு அறிவுசார் புதிர் போட்டியை விளையாட இருக்கிறது. ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று "HUNT FOR HINT" போட்டியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது ஒரு பல லெவல்களை கொண்ட ஆன்லைன் விளையாட்டு. கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும். விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம். விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம். இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்..... கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்.... வாழ்த்துக்கள்.... டிஸ்கி: விளையாட்டின் ஆர்வத்தை கருதி.... இந்த பதிவிற்கு வரும் அனைத்து கமெண்ட்டுகளும் மட்டறுக்கப்படுகிறது. Hunt for Hint is created by Terror Kummi Team, based on the concept of the popular online game Klueless. It is a multilevel game and each level is a web page. The questions will be in the form of picture, text, or some data. All you have to do is to hunt for the hints to cross each level and win.For Non Tamil Players: Dear Friends, Please read the Rules of the Game and play with a high integrity. With the above hope, We declaring that the Game to begins now... |
| You are subscribed to email updates from "சூரியனின் வலைவாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


Hunt for Hint
No comments:
Post a Comment