சூரியனின் வலை வாசல் |
| KLUELESS 7 - அறிவாளிகளுக்கான விளையாட்டு Posted: 10 Nov 2011 08:17 PM PST கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட "HUNT FOR HINT" கேமின் முன்னோடி "KLUELESS" தனது 7 ஆம் பாகத்தை இன்று காலை இந்திய நேரம் 11.11 க்கு வெளியிடுகிறது. இது இந்தூர் ஐஐஎம் மாணவர்களால் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு அறிவுசார்ந்த போட்டி. இந்த போட்டியின் மேல் இருந்த இன்ஸ்பைரேஷனால் தான் நாங்கள் இதை அடிப்படையாக கொண்டு HUNT FOR HINT நடத்தினோம். எதிர்பார்த்தது போலவே நல்ல ஆதரவு கிடைத்தது . பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இப்பொழுது அதன் ஒரிஜினல் வெர்ஷனை விளையாட நீங்கள் தயாரா? எங்களுக்கு தெரிந்து HUNT FOR HINT விளையாட்டு KLUELESS விளையாட்டை விட மிகவும் சுலபமாக அமைத்து இருந்தோம். க்ளூலெஸ் விளையாட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு கடினம் தான் ஹண்ட் பார் ஹிண்ட்க்கு வைத்து இருந்தோம். ஆனாலும் நம் பதிவர்கள் க்ளூலெஸ் கேமில் வெற்றி பெற எங்களால் ஆன உதவிகளை செய்ய முயற்சியாக தான் இந்த பதிவு. HUNT FOR HINT விளையாட்டின் அதே விதிமுறைகள் தான் இங்கும். ஆனாலும் புதியவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். எப்படி விளையாடுவது?
விளையாடுபவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய பிரத்தியேக தளத்திலேயே க்ளூக்களை கொடுக்கிறார்கள் இருந்தாலும் நம் தமிழ் பதிவுலக நண்பர்களுக்காக நாங்களும் இங்கு கமெண்ட்களில் க்ளூக்கள் கொடுக்கலாம் என இருக்கிறோம். எந்த காரணம் கொண்டும் நேரடி விடைகள் கொடுக்கப்பட மாட்டாது. நாங்களும் இனிதான் விடைகளை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உங்களை விட பின்னால் இருப்பதறக்கு வாய்ப்புகள் அதிகம், அதனால் க்ளூ கொடுப்பது தாமதமாகலாம். உங்களுக்கு விடை தெரிந்தால் நீங்களும் க்ளூகளை கமெண்ட்களில் தெரிவிக்கலாம். (எங்களுக்கும் உதவும் :) ) அனைத்து கமெண்ட்டுகளும் மாடரேட் செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்.... விளையாட்டை தொடங்க இங்கு கிளிக் செய்யவும். LETS PLAY TOGETHER.... ENJOY THE GREAT GAME :) with us |
| You are subscribed to email updates from "சூரியனின் வலைவாசல்" To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


No comments:
Post a Comment