Tuesday, August 28, 2012

Newsletter from Vikatan.com

 

விகடன்.காமில் இந்த வாரம்!

Join us: Free  Subscribe by E-Mail Free  Subscribe in a reader Facebok page Follow me
 
Discount  OFFER!
CLICK HERE TO READING  FREE!

சினிமா விமர்சனம் : அட்டகத்தி

காதல் போயின் காதல்... அதுவும் போயின் இன்னொரு காதல்! அட, காதலை செம ஜாலியாகக் கலாய்த்து ஒரு காதல் படம். அதுவும் தமிழ் சினிமா கண்டுகொள்ளாத புறநகர் சென்னையின் இயல்பான பின்புலத்தில்! கதை? 'அதெல்லாம் எதுக்கு?’ என்று கலகல காதல் சீன்களுடன் களம் இறங்கிக் கலக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் பா.ரஞ்சித். கானா பாடும் கல்லூரி மாணவர்களின் இயல்பை, அவர்களுடைய இன்ப துன்பப் பகிர்தல்களை உள்ளது உள்ளபடி சொல்கிறது படம். 'பளு தள்ளுறியா?’, 'பஸ்ஸுக்குள்ளாற ஜனமே இல்லை’, 'பார்த்தோம்ல... உங்க கெத்தை!’(முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

 

ரொமான்ஸ் ரகசியங்கள் !

CLICK HERE TO  READING  FREE!

 

உண்மை அதுவல்ல. திருமணம், காதலுக்கு முற்றுப் புள்ளியும் அல்ல. 13 வயதில் ஆரம்பித்து தொடர்ந்து வாழ்நாள் முழுக்க மீண்டும் மீண்டும், புதியவர்களுடன் துளிர்த்துக் கொண்டே இருக்க சாத்தியமுள்ள உணர்வுதான் காதல். அதன் இலக்கையும், இலக்கணத்தையும் பற்றி பேசுவதற்கு முன், 'என்னது... காதல் திரும்பத் திரும்ப துளிர்விட்டுக் கொண்டே இருக்குமா, இது எல்லாம் தமிழ் கலாசாரத்துக்கு அடுக்காதே?’ என்று போர்க்கொடி தூக்க சிலர் தயாராக இருக்கலாம். ஆனால், அறிவியல் உண்மைகள் என்பவை, மிகத்தெளிவாக கலாசார எல்லைக் கோடுகளை கடந்துதானே நிற்கின்றன. பருவ வயது துவங்கும்போதே ஆரம்பிக்கும் காதல் வேட்கை... மதம், இனம், மொழி, பிராந்தியம் என்கிற எல்லா கட்டமைப்புகளையும் தகர்த்து, ஒருவர் உயிரோடு இருக்கும் கடைசி நாள் வரை நீடிக்கிறது. அதனால் எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் கொள்ளும் தன்மை மனிதர்களுக்கு உண்டு. ஏன் தெரியுமா? நாம் ஏற்கெனவே இந்தத் தொடரில் பேசிக்கொண்டது போல, மனிதக் காதல் என்பது பெரும்பாலும் தாய் - சேய் உறவின் இன்னோர் மீட்டுருவாக்கமே. அதனால் தான் மனித பெண்ணுக்கு காதல் பெருகிவிட்டால்... தன் காதலனை அவள் குழந்தையைப்போல பாவிக்கிறாள். அவனை கொஞ்சுவதில் ஆரம்பித்து, அவனுக்கு அறிவுரைகள் கூறுவது எல்லாமே அவனை தன் மகன் என்று பாவித்தே.. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING   FREE!

வளரொளி நாதர் அக்னி சொரூபராக இருப்பதால், வருடத்தின் 365 நாட்களும் இங்கே நித்ய அக்னி பூஜை நடைபெறும். இதில் கலந்து கொண்டு வழிபடுவதால் தீராத பீடைகளும் நோய்களும் நீங்கும்; திருமண தோஷங்கள் தவிடுபொடியாகும். அதேபோன்று, அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள இரண்டு பல்லி உருவங்களை வழிபடுவதன் மூலம் பில்லி தோஷங்கள் அகலுமாம். வள்ளி- தெய்வானை தேவியருடன் ஸ்ரீசண்முகநாதராகவும், ஸ்ரீசுப்ரமணியராகவும் இரண்டு சந்நிதிகளில் முருகப்பெருமான் இங்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீசண்டீஸ்வரர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING   FREE!

இந்தியாவின் முன்னணி பிஸினஸ்மேன்களை ஒரு நிமிடம் மனக்கண் முன்னால் கொண்டுவாருங்கள். டாடா குழுமத் தலைவராக 2012 இறுதியில் பதவியேற்கப்போகும் சைரஸ் மிஸ்ட்ரி, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அனில் அம்பானி, ராகுல் பஜாஜ், ஆதி கோத்ரெஜ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர் காமத், காக்னிசன்ட் டெக்னாலஜீஸ் சி.இ.ஓ. ஃபிரான்ஸிஸ்கோ டிசூஸா, மஹேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா ஆகிய அத்தனைபேரும் எம்.பி.ஏ. படித்தவர்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் 40 சதவிகித சி.இ.ஓ.க்கள் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்கள்.. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

CLICK HERE TO READING  FREE!விகடன் 'யோக காலம்' வழங்கும் வார, மாத ராசிப்பலன்கள் இப்போது facebook-ல் இலவசமாக படித்து மகிழலாம்.

மூன்று கேள்விகள் - உங்கள் மனதைத் தினம் தினம் குழப்பிக்கொண்டு இருக்கும் மூன்று முக்கிய கேள்விகளுக்கான பதிலைத் தருவது தான் இந்த சேவையின் நோக்கம். சரியான நேரத்தில் உங்கள் குழப்பத்தைத் தீர்ப்பது மட்டும் அல்லாமல் உங்கள் மனத்தை இம்சைப்படுத்தும் அந்த மூன்று கேள்விகளுக்கு உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், இங்கே விடை அளிக்க..இங்கே க்ளிக் செய்க.

CLICK HERE  TO READING  FREE!

சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பது, போக்குவரத்தைச் சீர்படுத்துவது, வி.ஐ.பி-க்கள் வரும்போது பாதுகாப்பு கொடுப்பது... இவைகள் மட்டுமே காவல் துறையின் வேலை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? நெல்லை காவல் துறைச் செயல்பாடுகளைப் பார்த்தால் கையை உயர்த்தி சல்யூட் வைப்பீர்கள். நதி நீர் பங்கீட்டு விவகாரம் பக்கத்து மாநிலங்களை நம்முடைய எதிரிகளாக மாற்றி இருக்கும் சூழலில், தமிழகத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, 120- கி.மீ. தூரத்துக்குப் பாய்ந்து வயல்களைப் பசுமையாக்கிப் பின்னர் கடலில் கலக்கிறது. அத்துடன் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்திசெய்கிறது. (முழுவதும் படிக்க க்ளிக் செய்க...)

If you do not wish to receive any more emails, you can Unsubscribe here
Vikatan.com Private Limited  |757, Anna Salai, Chennai 600002. India.
Skype Chat: Vikatan.com | Google Talk: hivikatan


No comments:

Post a Comment