Wednesday, January 19, 2011

சூரியனின் வலை வாசல்

சூரியனின் வலை வாசல்


மொரீசியஸ் தைப்பூசக்காவடி...

Posted: 18 Jan 2011 08:32 PM PST

முஸ்கி: நாளைக்கு தைப்பூசம்

மலைக்கோவில்
தேர்
மொரீசியஸ்ல தமிழ் ஆட்சிமொழினு ஒரு பதிவுல சொல்லி இருந்தேன். தமிழர்களும் அதிகம். தமிழ் கடவுள் முருகன் மேல அளவுகடந்த பக்தி உள்ளவர்கள். பெரும்பாலானவர்களுக்கு சிவனும், முருகனும் குலதெய்வமாக இருக்கிறார்கள். தைப்பூச காவடியும், மகாசிவராத்திரியும் இங்கு தமிழ் நாட்டை விட வெகு விமரிசையாக கொண்டாடுறாங்க. இந்த இரண்டு விழாவுக்கும் அரசு விடுமுறை இருக்குதுனா பார்த்துக்கோங்க.



வரும் நாளைக்கு (ஜன்வரி 20) இங்க தைபூச காவடி. சென்ற வருடம் நான் இங்க வந்த புதுசுல பார்த்து அசந்து போயிட்டேன். இங்க பல தமிழர் கோவில்கள் இருக்குது. முருகன், துர்கை, சிவன் தான் பிரதானம். கோவிலுக்கு தமிழ் பேசும் குருக்கள்களை இந்தியா, இலங்கை பகுதில இருந்து வர வைக்கறாங்க.

காவடி ஊர்வலம்

கட்டர்போன்ஸ் (Quatre Bornes) என்ற இடத்துல இருக்கற முருகன் மலை கோவில் கொஞ்சம் பிரசித்தி பெற்றது. போன வருஷம் காவடிக்கு அங்க போயிருந்தேன். நம்ம தமிழ் நாட்டு கோவில மாதிரியே கட்டிட அமைப்பு, மலை மேல முருகன், தமிழ் குருக்கள், பாலாபிஷேகம் என தமிழ் நாட்டுல இருந்த உணர்வு.
ஆணி செருப்பு


காவடியும் நம்ம ஊர் மாதிரியே பால் காவடி, பழக்காவடி, வேல் காவடி, புஷ்பகாவடினு அமர்களபடுத்தினாங்க. இதுக்காக 10 நாள் விரதம்லாம் இருப்பாங்கலாம். எல்லாரும் காவடி எடுத்துக்கிட்டு ஊர்வலமா ஆட்டம் பாட்டத்துடன் வந்தாங்க. பெண்கள், நம்ம ஊருல இப்போலாம் விஷேசநாட்கள்ல கூட பார்க்க முடியாத டிரெடிஷனல் தாவணி, பாவாடை சட்டைல வந்து இருந்தாங்க.

சுவாமி வீதியுலா


(இதுக்கு தான் ரமெஷ் கூட சேர கூடாதுனு சொல்லுறது.  வெறும் படத்தை வெச்சி பதிவு போடுற வியாதி  தொத்திக்கிச்சே... சே...)

டிஸ்கி: கமெண்ட்ல அரோகரா போட தடை விதிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment